நாட்டுநலப்பணித்திட்டம் 2024|National Service Scheme|SankarInstituteofPolytechnic Collegeசங்கர்நகர்.
வணக்கம்
மத்திய மாநில அரசு உத்தரவின்படி ஸ்வச் பாரத் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் முதல் வரை சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படை அணியினர் இணைந்து தூய்மை பணியினை மேற்கொண்டு வருகின்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சங்கர் நகர் தாழையூத்து ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணிக்காக சுமார் 80 மாணவர்கள் 20 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பணியினை மேற்கொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கத்தில் சங்கர் நகர் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவி திருமதி k.பட்டு லட்சுமி தாழையூத்து ரயில் நிலைய கண்காணிப்பாளர் திரு S. சந்திரன் துறைத் தலைவர்கள் திரு செல்லப்பா, திரு நெடுஞ்செழியன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள் அனைவரும் தூய்மை இந்தியாவிற்கான உறுதிமொழியினை எடுத்தனர் .நிகழ்வின் ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செல்வராஜ், ஆதி சிவ செல்வம், வீர கஜேந்திர பாபு ஆகியோர் செய்திருந்தனர்.