சங்கர் பாலிடெக்னிக் சார்பாக தென் மண்டல அளவிலானதடகளப் போட்டிகள் நடைபெற்றது @kavalMuthappa
சங்கர் பாலிடெக்னிக் சார்பாக தென் மண்டல அளவிலான
தடகளப் போட்டிகள் நடைபெற்றது
சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக தென் மண்டல மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 15.02.2024 மற்றும் 16.02.2024 ஆகிய இரண்டு நாட்கள் திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது - திருநெல்வேலி, தூத்துக்குடி , தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பல கல்லூரிகளில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.இறுதியில் ஸ்கேட் பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றார்.வெற்றி பெற்ற மற்ற மாணவ மாணவியர்களுக்கு சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் திரு.சங்கர சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசன் பாராட்டி பரிசுகோப்பை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் வரதன்,சுந்தர், மற்றும் செல்வம் , சேரன்மகாதேவி ஸ்கேட் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மணிமாறன் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்
நெல்லை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கத்தில் மண்டல அளவிலான குழு விளையாட்டுகள் மற்றும் தடகள போட்டிகள் சங்கர் தொழில்நுட்ப கல்வி சார்பாக நடைபெற்றது, இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி மாவட்டத்தை சார்ந்த அணிகள் கலந்து கொண்டனர்,
இதில் சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தடகள போட்டிகளில் 82 புள்ளிகள் பெற்று முதலிடமும், குழு விளையாட்டுகள் மற்றும் தடகள போட்டிகளில் 187 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர், மாணவிகள் பிரிவில் குழு விளையாட்டுகளில் 120 புள்ளிகள் பெற்று முதலிடமும் தடகள போட்டிகள் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் 152 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஸ்காட் நிறுவனர் டாக்டர் கிளிட்டஸ் பாபு, அமலி கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி, அருன் பாபு, ஸ்காட் பாலிடெக்னிக் முதல்வர் மனிமாறன், நிர்வாக அலுவலர் சித்திரை சங்கர், உடற்கல்வி இயக்குநர் அன்வர்ராஜா, வண்டி மலையான், மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்