சங்கர்நகர் பழைய காலனியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
.கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் முதல்
நாள் ஆரம்பம்.
சங்கர்நகர் பழைய காலனியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா கணபதி ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் பழைய காலனி வளாகத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மகா கணபதி, பால சுப்ரமண்யர்,ஸ்ரீ மங்களேஸ்வரி, ஸ்ரீ மங்களேஸ்வரர், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ பைரவர், உத்சவ மூர்த்திகள், மற்றும் நவக்கிரக தேவதைகளுக்கும், ஜீர்ணோத்தாரண, ரஜத பந்தன, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக இன்று காலையில் நடைபெற்றது.இதனை முன்னிட்டு யாக யாக பூஜைகள், ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, மற்றும் யாத்ரா தான வகையறாக்கள் நடைபெற்றது. தொடர்ந்து சகல விமானங்களுக்கும், சம கால சகல மூலாலயம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.